23 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த தமிழரசன் - கார் பரிசு

 
பாலமேடு தமிழரசன்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். 

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 23 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் தமிழரசன்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா இன்று காலை ய்7 மணிக்கு தொடங்கியது. பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. 

 ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக அதிக காளைகளை மடக்கி பிடிக்கும் ஒரு மாடு பிடி வீரருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சார்பில் சொகுசு கார் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பாலமேட்டில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். 19 காளைகளை அடக்கிய மணி என்பவர் இரண்டாம் இடத்தையும், 15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாம் பரிசையும் தட்டி சென்றார். 

சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. சிறப்பாக விளையாண்ட ஜல்லிக்கட்டு காளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.