இந்திய பெருமைகளில் ஒன்று தமிழ் ; வாழ்க தமிழ்நாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

 
rn ravi

இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது வாழ்க தமிழ்நாடு என்று ஆளுநர் ஆர்.என். ரவி  குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

tn

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ரவி காணொளி காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  "நாட்டுக்காக உயிர் தியாக செய்த தீரமிக்க வீரர்களை நாம் இன்று நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியலமைப்பு வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.

ravi

இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்" என்றார்.