ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தை அகற்ற தமிழக அரசு உத்தரவு

 
போஇ

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களை உடனடியாக அகற்றுமாறு தமிழக  பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   விலையில்லா மடிக்கணினிகளில் இருக்கும் அந்த படங்களை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

ல்

திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் பெயர் மாற்றப்படும் என்று ஒரே பரபரப்பு எழுந்தது.  ஆனால் அரசு இதுவரைக்கும் அம்மா உணவகம் என்று பெயரை மாற்றவில்லை.  அதற்கு மாற்றாக பல்வேறு இடங்களில் கலைஞர் உணவகம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகளில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 அந்தப் படங்களை அகற்றிய பின்னரே மாணவர்களுக்கு  விலையில்லா மடிக்கணினிகள் மீண்டும் வழங்கப்பட இருக்கிறது.  

ல்

 கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது . கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்க முடியாத நிலை இருந்தது.   அந்த மடிக்கணினிகள் பள்ளிக்கல்வித்துறையில் தேங்கி கிடக்கிறது.  

தற்போது திமுக ஆட்சியில்  மீண்டும் மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   அதே நேரம் அந்த மடிக்கணினிகளில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படத்தை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இருவரின் படங்களையும் அகற்றிய பின்னர் புதிய படம்  ஒட்டிய பின்னர் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.