அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கை செயல்படுத்த சட்டம் - வல்லுநர் குழு அமைத்த தமிழக அரசு..

 
tn govt

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை  இயற்ற குழு  அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த குழுவில் சட்டநிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீடு

தமிழகத்தில்,  அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் எனப்படும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கான சட்டம் இயற்ற  வல்லுனர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  தலைமைச் செயலாளர் இறையன்பு அமைத்தக் குழுவில், உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தலைமையிலான குழுவில்,   வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

MK Stalin

மேலும், அரசு அலுவலர்கள் குழுவில் சட்டவிவகாரங்களை பொறுத்தவரையில் அதன் செயலாளர்களாக இருக்க கூடிய கார்த்திகேயன், மற்றும் சட்ட இயற்றுதல் செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோரும்,  பிற வல்லுநர்களை பொறுத்தவரையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சுப. வீரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் குழுவில் இருக்க கூடிய வி.என்.வி நிறைமதி ஆகிய இடம்பெற்றுள்ளனர். அத்துடன்  சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.