10% இட ஒதுக்கீடு - மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

 
assembly

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பினை அளித்திருக்கிறது.   இந்த நிலையில்  இந்த 10 சதவிகித இடம் ஒதுக்கீடு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி அதிமுக கூட்டத்தை புறக்கணித்தது. இதேபோல் பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. 

stalin


 
இந்த கூட்டத்தில்  10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள்து கருத்தை தெரிவித்தனர். இறுதியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக விரைவில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.