பிங்க் நிறத்தில் மாறும் பேருந்துகள்...பெண்களின் சிரமத்தை குறைக்க முயற்சி!!

 
tn

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் பெண்கள் இலவச பயணத்திற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி செயலாற்றினார்.  இத்திட்டத்தின் மூலம் பெண்கள் ,மாற்று திறனாளிகள், திருநங்கைகள் என பலரும் பயனடைந்து வருகின்றனர்.  மாநகர பேருந்துகளில் விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான பெண்களுக்கு உதவியாக உள்ளது.

tn

பெண் பயணிகளின்  எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ள நிலையில்,  இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 7,300 அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

tn

இந்த சூழலில் தமிழ்நாட்டில் மாநகர பேருந்து அனைத்தும் ஒரே நேரத்தில் இயங்குவதால் இலவச கட்டண பேருந்து எது? என்று தெரியாமல் பெண்கள் சற்று குழம்பி போய் உள்ளனர். இதனால் சிரமம் ஏற்படுகிறது.  இதை கருத்தில் கொண்டு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகரப் பேருந்துகளை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் நிறத்தில் பேருந்துகளை மாற்ற போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது . இதன் முன்னோட்டமாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3 பேருந்துகளுக்கு பிங்க் நிறம் பூசும் பணி நடைபெற்ற முடிந்து,  அவை இயக்கப்பட்டு வருகின்றன.  பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில்,  கட்டணமில்லா  பயண சலுகை பேருந்துகளுக்கு தனி நிறம் பூசப்படும் போது  மேற்கூறிய பயனாளர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.