#BREAKING தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

 
Praggnanandhaa

2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவித்துள்ளார்.

Praggnanandhaa: Pragga prodigy: The Rise and Rise of Rameshbabu  Praggnanandhaa - The Economic Times

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் கார்ல்சனை இந்த வருடம் மூன்று முறை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. ஒலிம்பியாட் போட்டியில் விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

கடந்த வருடம், தமிழகத்தைச் சோ்ந்தவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பெற்றவருமான சி.ஏ.பவானி தேவி, கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் உள்பட 35 பேருக்கு அா்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருட அர்ஜுனா விருது, இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.