#BREAKING வரும் 29ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!!

 
tn

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn
 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆக.29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் 30ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் தேதியில்  மாற்றம் செய்யப்பட்டு முன்கூட்டியே அமைச்சரவை கூடுகிறது .  தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் , புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது , அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  அத்துடன் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம் , ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.  புதுச்சேரியில் இல்லத்தரசிகளுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்போது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. 

stalin

 தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் நிலையில் மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.