#BREAKING செப்.26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!!

 
stalin stalin

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்.26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. 

mk stalin

இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வரும் 26ஆம் தேதி அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர சட்டம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

govt

முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கூடியது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றனர்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ,ஜெ . மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது