குடியரசு தின ஆளுநர் மாளிகை அழைப்புதழில் மீண்டும் தமிழ்நாடு

 
tn

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

rn ravi

சென்னையில் கடந்த நான்காம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி , தமிழ்நாடு என கூறுவதை விட தமிழகமென்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.  அதன்பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அத்துடன் தமிழக அரசின் முத்திரையும் இடம்பெறாமல் இந்திய அரசின் முத்திரை இடம்பெற்று இருந்தது.  இதற்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டனர்.  அத்துடன் இந்த தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர். பாலு , அமைச்சர்  ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இதையடுத்து ஆளுநர் தரப்பிலிருந்து விளக்க கடிதம் ஒன்று வந்தது.  அதில் தான் தமிழகம் என்று குறிப்பிடலாம் என்று சொன்னது  தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று  விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

tn

இந்நிலையில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டு குடியரசு தின விழாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.  முன்னதாக தமிழ்நாடு அரசு முத்திரையில்லாமல் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டு வெளியான பொங்கல் அழைப்பிதழ் சர்ச்சையாகி இருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு என்று பெயரும்,  தமிழ் ஆண்டும் குடியரசு தின அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.