பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசு என மாற்றம் ? - லியோனி கூறிய விளக்கம்

 
leoni

பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசு என மாற்றம் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தால் அடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள  கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் லியோனி பேசியதாவது: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒளித்து ஓராண்டாகிறது.  திராவிடம் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவரும் தமிழ் மொழியிலிருந்துதான் திராவிட மொழிகள் உருவானது என்பதை முதன் முதலில் கூறிய கால்டுவெல் பிறந்தநாளில் ஆட்சி பொறுப்பேற்றது வரலாற்று சிறப்பு மிக்கது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இலவச பேருந்து, பெண்களின் உயர்கல்விக்கு மாதந்தோறும் உதவித்தொகை போன்ற திட்டங்களால்  திமுக ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை பல சீர்திருத்தங்களால் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. கொரோனோ அலை வராது என்ற அளவிற்கு மருத்துவத்துறை கட்டமைத்தது. கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

books

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு, கலைஞரின் குறளோவியம் உள்ளிட்ட நூல்கள் ஜூன் 3ம் தேதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என கூறினார். இந்தாண்டு பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசு மாற்றம் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தால் அடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என கூறினார். முதலமைச்சரின் அதிகாரங்கள், ஆளுநரின் அதிகாரங்கள், திராவிட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவை பாடப்புத்தகத்தில் கொண்டுவர மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோரிக்கை வந்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கினால் 2023 - 24 கல்வியாண்டில் பாடபுத்தகத்தில் சேர்க்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.