தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதா - சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!!

 
tn

தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin

தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.   துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாளான கடந்த 6ஆம் தேதி நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கப்பட்டது.  சட்டப்பேரவை கடந்த 13ஆம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.  இதையடுத்து 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு  கடந்த 18 ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயற்கை சீற்றங்கள் குறித்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த 10 ஆம் தேதி நடை பெற்றது.  நேற்று ஆதிதிராவிட நலத்துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

stalin

இந்நிலையில்  தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை ,ஆளுநர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  கேள்வி நேரம் இல்லாமல் இன்றைய தினம் சட்டபேரவை நடத்த அமைச்சரும்,  அவை முன்னவருமான துரைமுருகன் , சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த நிலையில்,  இன்று கேள்வி - நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

tn


திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் இன்றைய தினத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  சட்டப்பேரவை தொடங்கியதும் அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  அத்துடன் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.