தமிழ்நாடு- ஆளுநர் விளக்கத்திலும் புதிய சர்ச்சை

 
ravi

2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. 

Tamil Nadu Governor RN Ravi Flies To Delhi Amid DMK MP's Memo Seeking His  Withdrawal

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, ஆளுநர் ஆர்.என்.ரவி காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தொலைக்காட்சிகளில் காரசார விவாத பொருளாகி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பெயர் மாற்ற சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டுவாரங்களுக்கு பின் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காசி-தமிழ்நாடு தொடர்பை குறிக்கவே தமிழகம் என பயன்படுத்தியதாக ஆளுநர் ஆ.என்.ரவி விளக்கமளித்துள்ள நிலையில், அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.