தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

 
tn

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கியது.  முதல் நாளான நேற்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கூட்டம் முடிவதற்குள் சர்ச்சை வெடித்தது.  தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காத ஆளுநர் , திராவிட மாடல் என்ற வார்த்தையையும்,  பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடாமல் அந்த பத்தியை முற்றிலுமாக தவித்தார்.  இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில் ஆளுநர் அச்சிடப்படாத வாசகங்களை வாசித்தது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.  இதன் காரணமாக ஆளுநர் ரவி கூட்டத்தொடர் முடிவதற்குள் பாதியிலேயே வெளியேறினார் . இந்த விவகாரம் நேற்று தமிழ்நாடு  முழுவதும் பெரும் பேசும் பொருளானது.

govt


இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  இக்கூட்ட தொடரில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.  முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னசாமி,  தில்லை காந்தி,  துரை கோவிந்தராஜன்,  சோமசுந்தரம் ஆகியோருக்கு இடங்கள் குறிப்பு வாசிக்கப்பட்டது அத்துடன் சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேராவுக்கும் , தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது

assembly

இதனிடையே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை தொடர்பாக சபாநாயகர் உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று சந்திப்பு நடத்தினர்.  எதிர்க்கட்சி துணை தலைவர் நியமிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கனவே கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.  இந்த சூழலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்தது பற்றியும் , சபாநாயகரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்ததாக தெரிகிறது.