தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 
tn assembly

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று 5வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் இன்று பதிலுரை அளித்தார். தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். ஏற்கனவே தமிழக சட்டப்பேரவை ஜனவரி 09ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திட்டமிட்டபடி தமிழக சட்டப்பேரவை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.