டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

 
tn

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

ravi

கடந்த 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய போது ஆளுநர் உரையுடன் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.  அப்போது தமிழ்நாடு அரசு அச்சுட்டு தந்த திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,  பெருந்தலைவர் காமராஜர் ,பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்களின் பெயர்களை ஆளுநர் கூறாமல் தவிர்த்த நிலையில்,  தானாக சில வாக்கியங்களை படித்தார்.  இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் ஆளுநர் பேசியவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் பேசும் பொருளானது.

tn

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.