தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்

 
governor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவதொடர்பாகவும், அவதூறு கருத்துக்கள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் இதுகுறித்து அவர் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது. 

டெல்லி பயணத்தின் போது தமிழ ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்திப்பார் என எதிர்ப்பார்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.  முன்னதாக தமிழ்நாடு  சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு , திமுக எம்பிக்கள் வில்சன் மற்றும் என். ஆர். இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கியதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.