ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..

 
ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி..

ரேஷன் அரிசி கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் குறியீட்டினை பயன்படுத்த தமிழக  அரசு திட்டமிட்டுள்ளது.

ரேஷன் கடைகள்

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு  பொது விநியோகத் திட்டம் மூலம் விலையில்லா மற்றும் குறைந்த விலை அரிசி  வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் விலையில்லா மற்றும் குறைந்த விலை அரிசி, சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது  அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக  தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதனை தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  அதாவது  அரசி கடத்தல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறையின் கிடங்குகளில் இருந்து பொது  விநியோகத்திற்கு கொண்டு செல்லப்படும் அரசி மூட்டைகளுக்கு க்யூ ஆர் குறியீடு  அட்டைகளை பதிப்பது   பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.  

ரேஷன் அரிசி கடத்தல்

பொது விநியோகத்திற்காக கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் ஒவ்வொரு அரிசி மூட்டையிலும் க்யூ ஆர் குறியீடு பதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.  இந்த நவீன முறையை  பயன்படுத்துவதன் மூலம்   அரிசி கடத்தல்காரர்கள் மீது வழக்கு தொடரவும் அரசுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.   நியாயவிலைக் கடைகளுக்கு மட்டுமே அரிசி சென்று வருவதை உறுதிப்படுத்தும் விதமாக,  ஆலைகளில் இருந்தே அரசி மூட்டைகளின் விநியோகத்தை கண்காணிக்கவும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   அரசி மூட்டைகளில் க்யூ ஆர் குறியீட்டை ஓட்டுவது மட்டுமின்றி,  ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில்   இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவிகளை பொருத்தவும் முடிவு செய்யப்பட்ட்டுள்ளதாக  உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.,