தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; பசங்க, மைனா, வாகைசூடவா படங்களுக்கு விருது

 
விக்ரம்

தமிழக அரசின் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான திரைப்படம், சின்னத்திரை, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன.

சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் மற்றும் காசோலை வழங்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு விருதுகள் - 2009

சிறந்த படங்கள்:

1.பசங்க

2.மாயாண்டி குடும்பத்தார்

3.அச்சமுண்டு அச்சமுண்டு

தமிழ்நாடு அரசு விருதுகள் - 2010

சிறந்த படங்கள்:

முதல் பரிசு - மைனா

2ம் பரிசு - களவாணி

3ம் பரிசு - புத்ரன்

தமிழ்நாடு அரசின் விருதுகள் -2011

சிறந்த படங்கள்

முதல் பரிசு - வாகை சூடவா

2ம் பரிசு - தெய்வத்திருமகள்

3ம் பரிசு - உச்சிதனை முகர்ந்தால்

சிறப்பு பரிசு - மெரினா

தமிழ்நாடு அரசு விருதுகள் - 2012

சிறந்த படங்கள்

முதல் பரிசு - வழக்கு எண் 18/9

2ம் பரிசு - சாட்டை

3ம் பரிசு - தோனி

சிறப்பு பரிசு - கும்கி

தமிழ்நாடு அரசு விருதுகள் - 2013

சிறந்த படங்கள்:

முதல் பரிசு - ராமானுஜம்

2ம் பரிசு - தங்கமீன்கள்

3ம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும்

சிறப்பு பரிசு - ஆள்

தமிழ்நாடு அரசு விருதுகள் - 2014

சிறந்த படங்கள்:

முதல் பரிசு - குற்றம் கடிதல்

2ம் பரிசு - கோலி சோடா

3ம் பரிசு - நிமிர்ந்து நில்

சிறப்பு பரிசு - காக்கா முட்டை

சிறந்த இசையமைப்பாளர்

2009-சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)

2010-யுவன்சங்கர் ராஜா(பையா)

2011-ஹாரிஸ் ஜெயராஜ்(கோ)

2012-இமான்(கும்கி)

2013-ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)

2014- ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)

சிறந்த இயக்குநர்கள்

2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு)

2010- பிரபு சாலமன் (மைனா)

2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)

2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

2013- ராம் (தங்கமீன்கள்)

2014- ராகவன் (மஞ்சப்பை)

சிறந்த நடிகர்:

2009 - கரண் (மலையன்)

2010 - விக்ரம் (ராவணன்)

2011 - விமல் (வாகை சூடவா)

2012 - ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்)

2013 -ஆர்யா (ராஜா ராணி)

2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)


சிறந்த நடிகை

2009 - பத்மபிரியா - பொக்கிஷம்

2010 அமலாபால் - மைனா

2011  - இனியா -  வாகை சூடவா

2012. - லட்சுமிமேனன் -  சுந்தரபாண்டியன் கும்கி

2013 - நயன்தாரா - ராஜா ராணி

 2014 - ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை

ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது