இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த அனுமதி

 
ஹ்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை இன்று நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது.

 தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுவதாக கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.   இந்த தேர்தலுக்கு முன்னர் தகுதியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று கோரி ஒரு வழக்கும்,   தேர்தல் அறிவிப்பு வேட்பாளர் பட்டியலை ரத்து செய்து புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரி  மற்றொரு வழக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

ட்

 இந்த மனுக்கள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தன.   மனுக்களை விசாரித்த நீதிபதி,   முன்னரே அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடத்த அனுமதி அளித்தார்.  மேலும் தேர்தல் முறையாக நடந்தால் முடிவுகளை தேர்தல் அதிகாரி அறிவிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

 நிர்வாகிகள் தேர்வு வழக்கில் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.   மேலும்,   இந்த மனுக்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்திருக்கிறார்.