மன்னிப்பு கேட்டார் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர்

 
n

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார்.

 டாஸ்மாக் மதுபான விற்பனை கொள்முதல் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தி தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.   இது தொடர்பாக நேர்காணலும் அளித்திருந்தார் . இதை அடுத்து தன் மீது அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

se

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை நீக்கி விட்டால் இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

 இதற்கு பதில் அளித்த நிர்மல் குமார் தரப்பு வழக்கறிஞர்,  முகாந்திரத்தின் அடிப்படையிலேயே வலைத்தளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

 அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர்,   எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார். அப்போது நிர்மல் குமார் தரப்பில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் செந்தில் பாலாஜி குறித்து மூன்று பதிவுகள் பதிவிட்டதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும்,  அந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டது என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது .  ஆனாலும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மன்னிப்பு விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.