அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்; யாராக அசைக்க முடியாது- தமிழ் மகன் உசேன்

 
Tamil

அதிமுகவில் அனைவரும் பாகுபாடின்றி ஒற்றுமையாக இருப்பதாக தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்: கடந்துவந்த அரசியல் பாதை

தமிழ்நாட்டில் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திட, எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஹஜ்ரத் மோத்தி பாபா தர்காவில், தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

பிராத்தனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மகன் உசேன்,”வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்ற எதிர்பார்ப்போடு, திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி  மீண்டும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வரவேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றது.திமுக இஸ்லாமியர்களை புறக்கணிக்கின்ற இயக்கமாக உள்ளது. இதை நான் ஒரு இஸ்லாமியன் என்ற அடிப்படையில் சொல்லவில்லை.தன்னந்தனியாக ஒரு பெண் நடந்து சென்றால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காலமாகவும், பட்டப் பகலில் பலாத்காரம் நடைபெறும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போயிருப்பதை பார்க்கிறீர்கள். 

தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திமுக அரசு எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்புவது, மீண்டும் எடப்பாடியை முதலமைச்சராக்குவது என மக்கள் மத்தியில் எண்ணம் உள்ளது.எல்லாம் வல்ல இறைவன் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்த செய்ய வேண்டும். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எங்களுடைய பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக் கொள்வார், இயக்கம் ஒன்றிணைய வேண்டும் என பிரார்த்திக்க வில்லை. இயக்கம் ஒன்றிணைந்து தான் உள்ளது. இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. எந்த பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக உள்ளது” எனக் கூறினார்.