ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வரிசையில் ஈபிஎஸ் - தமிழ்மகன் உசேன்

 
தமிழ்மகன் உசேன்

திராவிட பரிணாம வளர்ச்சிக்கு காரணமான ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வரிசையில் இபிஎஸ் என மூன்று எழுத்து அடுக்குமொழியில்  வரிசைப்படுத்தி அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேசினார்.

கார் இல்லை! ஹவுசிங் போர்டு வீட்டில் தான் குடித்தனம்! அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்  உசேன் எளிமை! | Admk presidium leader Tamilmagan hussain history - Tamil  Oneindia

அதிமுக முன்னாள் அவை தலைவர் மறைந்த மதுசூதனனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தண்டையார்பேட்டையில் நாள்  முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமைப்பு செயலாளர்  பாலகங்கா மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, விருகை ரவி ஆகியோர் தொடங்கிவைத்து மதுசூதனனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக மதுசூதனின்  படத்தை ஏந்தி தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே  இருந்து பேரணியாக வந்தனர். 

நிகழ்ச்சிக்கு பின் பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், “விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார். பின்னர் திராவிட பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த மூன்று எழுத்து உடைய தலைவர்கள்தான், அதில்
ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர், அம்மா வரிசையில் ஈபிஎஸ் தான். என்னை கட்சியில் அடையாளம் காட்டியவர் மதுசூதனன்” எனக் கூறினார்.