கரும்ப முதலில் கொடுக்காமல் திரும்ப அறிவிப்பதுதான் திராவிடமாடலா?- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

சின்னம் மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி நெல்லிக்காய் மூட்டைப் போல சிதறிபோகும் என அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

AMMK leader TTV Dhinakaran appears before ED in Delhi for second time- The  New Indian Express

சென்னை தலைமைசெயலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை ஆட்சி இருக்கும்வரை பூர்த்தி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை. 20 மாதங்களாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவருகின்றனர். ஒவ்வொரு விஷயத்திலும் பொய் சொல்லி, மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர். கரும்ப முதலில் கொடுக்காமல் திரும்ப அறிவிப்பதுதான் திராவிடமாடலா? கரும்பு கொடுத்தால் குறைக்கூறுவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். சரியான நிர்வாக திறனுடன் திமுக அரசு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும்.

துக்ளக் ஸ்டைலில் செயல்படாமல் உண்மையான திராவிட மாடல் ஆட்சியை திமுக அரசு வழங்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைபாட்டையும், ஆட்சிக்குவந்த பின் மாற்றியும் செயல்படுகிறது. ஆசிரியர்களை, விவசாயிகளை ஏமாற்றி ஆட்சியை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் என்னதான் கூட்டணி அமைத்தாலும், திமுகவுக்கு மக்கள் அடி தருவார்கள்.சின்னம் மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி நெல்லிக்காய் மூட்டைப் போல சிதறிபோகும்.

சரியான கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றிபெற்று அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பொதுச்செயலாளாராக மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் போதாது. தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமமுக நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது நவம்பரில் அறிவிக்கப்படும், பதவி இல்லை என்றவுடன் தர்மயுத்தம் தொடங்கியவர், அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணமே ஓபிஎஸ் தான்” எனக் கூறினார்.