பொங்கல் திருநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv

பொங்கல் பண்டிகையையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் , "தமிழர்களின் தனிப்பெரும் விழாவாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘மகிழ்ச்சியான விவசாயிகளை கொண்டிருக்கும் நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்' என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உற்றத்துணையாக உள்ள உயிர்களையும் கொண்டாடுவோம்.

TTV

பொங்கல் என்பது நமக்கு அறுவடைத்திருநாள் மட்டுமல்ல; உலகின் மூத்த குடியான தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பறைசாற்றுவதற்கான திருநாள் என்பதை உணர்ந்து உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனத்தின் பெருமைகளை உயர்த்தி பிடித்திடுவோம். நாட்டில் மக்கள் நலம், மண் வளம், அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். தைப்பொங்கல் திருநாள் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.