அதிமுகவின் நிலைமைக்கு பாஜகதான் காரணம் - டிடிவி தினகரன்

 
ttv

அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran

புதுக்கோட்டையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிற்கு இதுபோன்ற நிலைமை வந்ததற்கு காரணமே டெல்லிதான். பாஜக நினைத்தால் மட்டுமே மீண்டும் அதிமுக ஒன்று சேர முடியும். ஓபிஎஸ், ஈபிஎஸ் சண்டையால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது. இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலைதான் இருக்கிறது. வரும் 27ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசித்து இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும் யாரிடமும் சமரசம் கிடையாது. யாரிடமும் மண்டியிடும் இயக்கமல்ல அது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக ஆட்சிக்கு வந்தது. 20 மாத திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை ஏற்று இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது போல தற்போதும் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுயநலத்தில் பதவிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்” எனக் கூறினார்.