ஜெயலலிதா மரணத்தில் திமுக மாட்டிக்கொள்ளும்- டிடிவி தினகரன்

 
TTV Dhinakaran

காங்கிரஸ் ஆட்சியில் இந்தி மொழி திணிக்கப்பட்டதால் தான் காங்கிரஸ் இதுவரை தமிழகத்தில் ஆட்சிக்கு வர இயலவில்லை, இது பா.ஜ.கவிற்கு  நன்றாக தெரியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மத உணர்வுகளைத் தூண்டி... அரசியல் லாபம்.. இங்கு இடமில்லை... டிடிவி தினகரன்!!  | No place to Insulting the leaders inciting religious sentiments says TTV  Dhinakaran - Tamil Oneindia

கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் என தெரிவித்துள்ளது. அது அவரது ஆசை. கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  மக்கள் வரிப்பணத்தில் அடித்த கொள்ளைதான்  திமுக ஆட்சிக்கு வர வழி வகுத்தது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டதால் தான் இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை. இது பாஜகவிற்கு நன்றாக தெரியும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை.ஆவின் பால் விலை உயர்வு கூடமக்களை கடுமையாக பாதிக்கும். சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே தொடங்கிவிட்டார்கள். மழை காரணமாக காலம் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழை காரணமாக பணிகள் முடிக்கவில்லை என சொல்லி இருக்க வேண்டும். கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம். செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதில் தி.மு.க.வின் செயல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் அரசியல் செய்தால் திமுக நிச்சயம் மாட்டிக்கொள்ளும்” எனக் கூறினார்.