டிடிவி தினகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

 
ttv

உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

NDTV on Twitter: "Top court stays trial court proceedings against TTV  Dhinakaran https://t.co/rlp73LGjN4 https://t.co/jLBPpPOgQ3" / Twitter

அ.ம.மு.க  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஒன்றாம் தேதி வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனிவார்டில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலம் பெற்றதையடுத்து  தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

முன்னதாக டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.