ஓராண்டு சாதனை என மார்தட்டிக்கொள்வதா.. விவசாயிகளின் கண்ணீர் குரல் அரசின் காதுகளுக்கு எட்டுமா? - டிடிவி தினகரன்..

 
டிடிவி தினகரன், மு.க. ஸ்டாலின்


விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஓராண்டாகியும்  அதை நிறைவேற்றாமல் விவசாயிகளை வெளியேற்றும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டத்திருத்ஓராண்டு சாதனை என மார்தட்டிக்கொள்வதா..  விவசாயிகளின் கண்ணீர் குரல்  அரசின் காதுகளுக்கு எட்டுமா? -  டிடிவி தினகரன்..த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தேனி மாவட்டம், மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிகளுக்குட்பட்ட மலை கிராமங்களில் அரை நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திரு.ஸ்டாலின் அரசு அமைத்து ஓராண்டு முடிந்துவிட்டது.

டிடிவி தினகரன்

ஆனால், இப்போது அந்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் வனப்பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் வேலையை ஸ்டாலின் அரசின் வனத்துறை அதிதீவிரமாக செய்து கொண்டிருக்கிறது. எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், காலம் காலமாக விவசாயம் செய்துவரும் பூர்வகுடி விவசாயிகளிடமாவது உண்மையாக நடந்து கொள்ளக்கூடாதா?‘ஓராண்டு சாதனை’ என்று அவர்களுக்கு அவர்களே மார்தட்டிக் கொண்டாடும் இரைச்சலுக்கு இடையே அந்த ஏழை விவசாயிகளின் கண்ணீர் குரல்கள் தி.மு.க.அரசின் காதுகளுக்கு எட்டுமா?” என்று தெரிவித்துள்ளார்.