இரு கைகளையும் விட்டு பைக் ஓட்டியபடி ஜிபி முத்துவுடன் TTF வாசன் சாகசம்

 
ttf

 Twin Throttlers என்ற யூ டியூப் சேனலை நடத்திவரும் TTF வாசன், டிராவல் விலாக் பக்கத்தை நடத்திவரும் இவருக்கு 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூடியூஒஇல் உள்ளனர். 

பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது, போகும் வழியில் சிறுவர்கள், முதியவர்களை கண்டால் அவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது.ஆனால் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சாகச வாகன ஓட்டி வாசன் ஆவார்இந்நிலையில் யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் லடாக் செல்வதாக கூறுகின்றனர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் செல்லும் பைக்கின் வேகம் காண்போரையும் பதைபதைக்கவைக்கிறது. இதுபோன்ற செயல்களை காவல்துறை கட்டுபடுத்துமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.