தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு அமல்!

 
eb

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.  இதையடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது.  இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்கு முறையான தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

eb

100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் குடிசை ,விவசாயம், கைத்தறி ,விசைத்தறி முதலியவற்றிலும் மின்சார மானியம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 - 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

tn

மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூபாய் 27.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.