தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

 
corona

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,283 ஆக அதிகரித்துள்ளது.

Bihar Corona Update Patna Covid 19 condition new cases increased Omicron  new variant may come with fourth wave - बिहार में तेजी से बढ़ रहे कोरोना का  कारण हो सकता है ये


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 10 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 367 பேருக்கும், கோவையில்  156 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.