தென்னிந்திய அளவிலான கபடி போட்டி - பெண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி

 
கபடி

நெல்லை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடக மாநில பாங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டன்சத்திரம் அணியும் வெற்றி பெற்றன. 

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மைதானத்தில், செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் நெல்லை அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான கபடிபோட்டி நடைபெற்றது. கடந்த 6 ஆம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடந்த இந்த போட்டியில் கர்நாடகா ,சென்னை, ஆந்திரா மற்றும் சென்னை போலீஸ் அணி ஆகிய தென்மாநில அணிகள் மோதின.   இறுதி போட்டியானது நேற்று நடை பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டன்சத்திரம் அணியும் , கார்நாடக மாநிலம் பெங்களூர் அணியும் மோதின. இதில் தமிழ்நாடு அணி 38 – 33என்ற கணக்கில்  வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற பெண்கள் அணிக்கு ஐம்பதாயிரம்  ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கபட்டது. 

கபடி

ஆண்கள் பிரிவில் கர்நாடக மாநிலம் பாங்க் ஆப் பரோடா அணியும் ஹைதராபாத்  ஆர்டிலிட்டி ஆர்மி அணியும் மோதின. இதில் கர்நாடக மாநிலம் பாங்க் ஆப் பரோடா அணி 45-33 என்ற கணக்கில் ஆர்மி அணியை வீழ்த்தியது. முதலிடம் பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணமும் , இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு எழுபத்திஐந்தாயிரம் பணமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.