விடுமுறை போட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல தேவையில்லை; கடவுள் மனதில் இருக்கிறார்- ஆளுநர் ரவி

 
rn ravi

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்கின் 553 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை ஜி.என் செட்டி சாலையில் உள்ள குருதுவாரில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தன்னுடைய மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தி.மு.க. கண்டனம்! | nakkheeran

பின்னர் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, “இந்தியாவிற்கு எப்போதும் கடவுளின் கருணை உண்டு.அரசியல் ரீதியாக மத ரீதியாக எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ குருநானக் பிறப்பெடுப்பார். உலகின் பல இடங்களுக்கும் சென்று  உண்மையை குருநானக் பரவச் செய்தார். குருநானக் இலங்கை செல்லும் போது ராமேஸ்வரம் வழியாக சென்று இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க குருதுவார் ராமேஸ்வரத்தில் இன்றும் இருக்கிறது. கடவுள் உண்மையாக இருக்கிறார் .அவர் யாருக்கும் பயப்பட மாட்டார்.கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்க வேண்டும்.முன்னுரிமை பின்னுரிமை என எதுவும் கிடையாது. மனது சுத்தமாக இருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள். கோவிலுக்கு சென்று நூறு தேங்காய் உடைப்பது முக்கியமில்லை.

விடுமுறை போட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல தேவையில்லை. கடவுள் மனதில் இருக்கிறார். கடுமையாக உழைக்க வேண்டும். அதிக அளவு பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள். வேற்றுமை இல்லாத இந்திய நாட்டை இந்தியாவாக ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டவர் குருநானக்.
அனைவரும் கடவுளின் குழந்தைகள் தான். ராஜாக்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பிறப்பு கொடுத்தவர்கள் பெண்களே எனவே பெண்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என குருநானக் அப்போதே வலியுறுத்தினார்” என பேசினார்.