தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்

 
patient

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID-19 in Tamil Nadu: 30K people screened daily in Chennai

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 50 ஆயிரத்து  547 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 247 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 98 பேருக்கும், கோவையில் 130 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரத்து 530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து ஒராயிரத்து 916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 598 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.