தமிழகத்தில் மேலும் 2,448 பேருக்கு கொரோனா

 
corona

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,448 ஆக அதிகரித்துள்ளது.

Corona Update: देश में बढ़ रहा है कोरोना के चौथी लहर का खतरा, 24 घंटों में  आए 13313 नए केस-coronavirus outbreak in india covid 19 cases update on 23rd  june 2022 | News24


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 3 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 796 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 410 பேருக்கும், கோவையில்  117 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2,465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 18,802 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.