கொரோனாவால் நிறுத்தப்பட்ட பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

 
Sivasankar

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

சட்டபேரவையில் வினா விடை நேரத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் வரை நகரப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்  கேள்விக்கு, பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ் சிவசங்கர் திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் வரை நகரப்பேருந்து இயக்குவதகு மோட்டார் வாகன விதிகளில் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். இதேபோல் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட பேருந்து நடைகளை அதிக்கப்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார். 

sivasankar

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோணா காலத்தில் திருச்செங்கோடு பகுதியில் 10 வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. அவை படிப்படியாக தற்போது இயக்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் நடைகள் குறைக்கப்பட்ட பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மினி பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிப்பது குறித்த சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ,மினி பேருந்துகள் உரிமையாளர்களிடம் கோரிக்கை பெறப்பட்டு பேருந்து நிலையத்திற்குள் மினி பேருந்துகளை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.