சென்னை ஐஐடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓமைக்ரான் - ராதாகிருஷ்ணன்

 
Radhakrishnan

ஐஐடியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனைவருக்கும், ஓமைக்ரான் வகையான வைரஸ் தான் கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவின் மிக முக்கியமான, இரண்டாவது பழமையான மருத்துவமனை ராஜீவ்காந்தி என்றும், சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உயிரை பணையம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இனி பயன்படுத்தமாட்டோம் அதற்கு பதில் புதிய கட்டடம் கட்டப்படும். 

iit

மேலும் 26 பேருக்கு சென்னை ஐஐடியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் தொற்று பாதிப்பு சதவீதம் 2.5 % ஆக உள்ளது. அதேபோல் சென்னை ஐஐடியில் நாளைக்குள் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  ஐஐடியில் நாளை முதல் குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அனைவருக்கும் ஓமைக்ரான் வகையான தொற்று தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போன்று புதிய வகை தொற்று இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஐஐடி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அதேபோல் 6 வயது முதலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை, அவை வந்தவுடன் தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று கூறினார்.