எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

 
mbbs

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, 2022-23ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறினார். www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்..இதேபோல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய பட்டயப் படிப்புகள் மற்றும் யோகா, இயற்கை மருத்துவம் பட்டயப் படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்புகளில் சேர நாளை (செப்.,21) முதல் அக்.,12 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.