3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை

 
tn assembly

தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். இதில், ஏராளமான நூலகங்களை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பழுதடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில், உள்ள நூலகங்களை புதுப்பித்து தர வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.