தோல்விகளை கண்டு மனம் தளராதீர்கள்- ஆளுநர் ஆர்.என்.ரவி

 
ravi

தோல்விகளை கண்டு மாணவர்கள் மனம் தளரக்கூடாது என்று தமிழக ஆளுநர் ரவி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலளிக்க வேண்டும்: ஆளுநர்  ஆர்.என்.ரவி பேச்சு


சென்னை மதுரவாயல் அருகே வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் 19 ம் பட்டமளிப்பு விழாவில் 684 மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெறும் நிகழ்ச்சி கல்லூரி வேந்தர் வீரையன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் ஜப்பான் நாட்டு தூதர் டாகா மாசாயுக்கி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து ஆளுநர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.


நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “இந்தியாவுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது இப்படி இருப்பதற்கு பிரிவினை வாதமே காரணம். சரியான திட்டமிடலால் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு 100 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தியை அடைவோம் என 2016 ஆம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே இலக்கை எட்டி விட்டோம். வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் இருக்கிறது. தோல்விகளை கண்டு மாணவர்கள் மனம் தளரக்கூடாது. தோல்விகளே வெற்றிக்கான முதல் பாடம்.

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி என்றும் வட பகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வட பகுதியிலிருப்பவர்கள் இங்கும் தெற்கிலிருப்பவர்கள் அங்கும் செல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகும் திராவிட இனம் என கூறுவது தவறு” எனக் கூறினார்.