மோடியை எதிர்க்கும் முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் தான் முதலிடம் - கே.எஸ்.அழகிரி

 
ks

மோடியை எதிர்க்கும் முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார். என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

வேலுார் சிப்பாய் புரட்சியின் 216வது நினைவு தினத்தையொட்டி, வேலுார் கோட்டை அருகே மக்கான் சந்திப்பிலுள்ள நினைவுத் துாணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். பின், சிப்பாய் புரட்சியில் வீரமரணமடைந்த சிப்பாய்களுக்கு, வீர வணக்க கூட்டம் வேலுாரில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கே.எஸ்.அழகிரி உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது; உலகிலேயே அதிக வயதுள்ள கட்சி இரண்டு; ஒன்று, காங்கிரஸ் மற்றொன்று கம்யூனிஸ்டு ஆகும். நம் தோழமை கட்சி, இன்று தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. நம் அன்புக்குரிய மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக உள்ளார். அப்படி இருந்தும், இங்கிருந்த காங்கிரச் கட்சி கொடி அகற்றப்பட்டுள்ளது. ஆளுநர் வந்தால் கட்சி கொடியை அகற்ற வேண்டும் என, சட்டம் உள்ளதா? ஆளுநரை பார்த்து போலீசார் பயப்படுகின்றனரா ?பா.ஜ.,வை பார்த்து பயப்படுகின்றனரா ? என்பது தெரியவில்லை. அ.தி.மு.க., உடைவதற்கு ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி உள்ளே நுழைய பார்க்கின்றனர். மோடியை எதிர்க்கும் முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.