ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் மத்திய அரசு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

 
ks

செல்வந்தர்களின் நலன் காக்கும் மத்திய பாஜக அரசு ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் அரசாக செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு,  சமையல் எரிவாயு விலை உயர்வு , வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மற்றும்  அமலாக்க துறை மூலமாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான அரசு  மேற்கொண்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பி நேற்று நாடு முழுவது போராட்டம் நடத்தப்பட்டது.  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது, சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யை கடுமையாக உயர்த்தியதன் வாயிலாக, சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு, தன் பணக்கார நண்பர்கள் கொள்ளை லாபம் அடைவதற்காக, '5ஜி ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக கிடைத்திருக்க வேண்டிய, பல லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக, பா.ஜ.க அரசு செல்வந்தர்களின் நலன் காக்கும், ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் அரசாக செயல்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.