தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம்!!

 
tn

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்திய கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

tn

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற  தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் மாநிலங்களின்  சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள்,  சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் ,பெண்கள் பாதுகாப்பு , மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ,ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். 

mk stalin

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், திருவனந்தபுரத்தில் நேற்று (3.3.2022) தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும், விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு இன்று (4- 9- 2022) கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தில், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாகவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.