லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டம் ..

 
ஸ்டாலின்


புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் மீண்டும். லண்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் செல்கிறார்.  முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் செல்லும் முதல் அமெரிக்க பயணம் இதுவே ஆகும்..   

லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. புதிய முதலீடுகளை ஈர்க்க திட்டம் ..

தமிழகத்தின்  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்  பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.  இந்த நிலையில் தமிழகத்திற்கு தொழி முதலீடுகளை  ஈர்ப்பதற்காக முதல்வர் இரண்டாவது முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.  ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் துபாயில் நடைபெற்ற ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சியில்  பங்கேற்று,  பல்வேறு முதலீட்டாளர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.  துபாய் , அபுதாபி பயணத்தின் மூலம் ,6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரூ.1,600 கோடி முதலீடு; 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது..

இந்த நிலையில் வருகிற ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலை மாதம் அமெரிக்காவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  இந்த பயணத்தின் மூலம்  மேலும் பல நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க  உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சரின் துபாய் சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அவர் வெளிநாடு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.