மம்தா பானர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

 
mk stalin and mamata

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அந்த மாநில தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தேசிய தலைவர்கள் பலரும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மேற்கு வங்க முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், என குறிப்பிட்டுள்ளார்.