தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

 
stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

cm stalin

முன்னதாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்ந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த சிறப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.