பாட்டாளி மக்களுக்கான ஆட்சியாக திமுக அரசு செயல்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

 

மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின பூங்காவில் மே தின நினைவு சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மே தின நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், சி.வி கணேசன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் தினத்தன்று இங்கு வந்து மரியாதை செலுத்தி வருகிறோம். ஏழை எளியவருக்கும், பாட்டாளி மக்களுக்கான ஆட்சியாக திமுக அரசு செயல்படும். தொழிலார்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல, ஏழைகளை வாழ வைக்கும்   அரசாக திமுக ஆட்சி திகழ்கிறது. அண்ணா, கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஏழை எளியவர்களுக்கு பாட்டாளி தோழர்களுக்காக ஆட்சி நடைபெற்றது. 

May day

ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியது, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் கொடுத்ததும் திமுக. ஏழைகளுக்காக எவ்வளவோ திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் அமைத்தது திமுக. ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்தது திமுக. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்டம் கொண்டு வந்தது, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது, அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தது, திமுக ஆட்சியில் தான். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒளித்தது கலைஞர் எனவும், இந்த வகையில், பணி நேரத்தில் பகல் முழுவதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நலனுக்காக அவர்களுக்கு நாற்காலி அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் திட்டம் தொடங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது. கலைஞர் செயல் பட்டது போல அவரது மகனான நானும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்து வருகிறேன். கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1930 ஆம் ஆண்டு மே தினத்தை கொண்டாடியது தந்தை பெரியார். பெரியார் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மாஸ்கோ ரஷ்யா என பெயர் வைத்தார். அதன் தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி எனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார்.