மெரினா நினைவிடங்கள் ஜொலிக்கின்றன... ஆனால் காமராஜர் நினைவிடம் ? - அண்ணாமலை கேள்வி

 
annamalai

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்கள் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம்  கேட்பாரற்று கிடைப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 


இது தொடர்பாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பல தலைவர்களின் நினைவிடங்கள், சென்னை மெரினா கடற்கரையில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம் உட்பட, காந்தியை பின்பற்றிய தலைவர்களின் நினைவிடங்கள் கிண்டியில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன். இதற்காக, தமிழக பா.ஜ.க சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம். நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் பா.ஜ.,வுக்கு அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, முக்கியமான சுற்றுலா தலமாக மாற்றுவோம் என, உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். 

Annamalai

காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியை பா.ஜ., கல்வியாளர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறக் கூடிய முதல் மாணவருக்கு, 1 லட்சம்; இரண்டாம் பரிசு, 50 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம்; 117 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.காமராஜரின் பிறந்த நாளில், பா.ஜ., சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகளை துவங்க உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.