திமுக அரசின் கபட நாடகம் - அண்ணாமலை விமர்சனம்

 
Annamalai Annamalai

தி.மு.க. அரசின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்க போவதாக, ஆகஸ்ட் 11ம் தேதி உறுதிமொழி எடுத்தார்.தமிழக அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' நிறுவனம், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட்14ம் தேதி, ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  
   
இதேபோல் கனல் கண்ணன் கைதிற்கும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை, சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்பும், கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது, தி.மு.க., அரசு.மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு, உடனே கைது செய்துள்ள அரசின் நடவடிக்கை வாயிலாக, கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.